எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

கோபமேலாண்மை

கோபம் என்பது வாழ்கையை அழிக்கும் ஒரு அழிவுகரமான உணர்ச்சியாக இருக்கலாம்.  இது மக்களின் மகிழ்ச்சியைப் பறிக்கும் ஒரு நாட்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம்.  எங்கள் PUREMIND® கோபமேலாண்மைத் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கோபம் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக்கொள்ள உதவுகிறது.  அவர்களின் நீண்டகால உணர்ச்சிப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் கோபத்தூண்டுதல்களை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்து அவற்றை நிரந்தரமாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள்.

கோபத்தை விடுவது

கோபத்தின் அடியில் இருக்கும் வலியை நிவர்த்தி  செய்தல்

எங்கள் PUREMIND® கோபமேலாண்மைத் தொகுதியுடன்

நாம் அனைவரும் அவ்வப்போது கோபப்படுகிறோம். ஆனால் கோபம் வெடிக்கும் போதும் மற்றும் தொடர்ச்சியாக  இருக்கும்  போதும், ​​​​அது மக்களின் மகிழ்ச்சியைப் பறித்து வாழ்க்கையை அழிக்கும் ஒரு மன நிலையாக  மாறும்.  கோபம்  ஒரு வடிவம்  என்பதை உணர்ந்து ஏற்றுக்கொள்வது குணப்படுத்துவதற்கான  முதற்படியாகும்.  தூண்டுதல்களை  எவ்வாறு  அங்கீகரிப்பது மற்றும் சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது நீடித்த மாற்றத்தை உருவாக்கும்  அடுத்தபடியாகும். எங்கள் PUREMIND® கோபமேலாண்மைத் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு  அவர்களின் கடந்தகாலத்தை  புறநிலையாகப்  பார்க்க உதவுகிறது மற்றும் கோபத்தை உருவாக்கும் வடிவங்கள் மற்றும் தூண்டுதல்களை அடையாளம்  காண  உதவுகிறது.  கடந்தகாலம்   ஒரு முடிந்து போன காலம் என்பதைப்    புரிந்துகொள்ள  இது  உதவுகிறது.  ஆனால் எதிர்காலத்தில் கோபத்தை  நிர்வகிக்க  உதவும்  பாடங்கள்  உள்ளன. தங்களின் கோபத்தை  ‘ மீளப் பெறுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களின் சொந்த ஆரோக்கியமற்ற  வடிவங்களையும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தையும்  அடையாளம்  கண்டுகொள்கிறார்கள்.  இது அவர்களுக்கு விடுவிப்பதற்கும்  குணப்படுத்துவதற்கும் உள்ள  வழிகளைப் பார்க்க  உதவுகிறது.  தொகுதியை நிறைவு  செய்யும்  வாடிக்கையாளர்கள்  பெரும் நிம்மதி  மற்றும் எதிர்காலத்தில் தங்களின் கோபத்தை  நிர்வகிக்கும்  திறனுடன்  வெளிப்படுகிறார்கள்.