எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

மதுபான துஷ்பிரயோகம்

மது அருந்துவதை விட்டு விடுவது எளிதல்ல. பெரும்பாலும் மதுபானம் (ஆல்கஹால்) சார்ந்து இருக்கும் அடிப்படை உளவியல் சிக்கல்கள் தவறாக கண்டறியப்பட்டவை அல்லது சிகிச்சையளிக்கப்படாமல் விடப்படுகின்றன. எங்கள் PUREMIND® மதுபான துஷ்பிரயோகத் தொகுதி குடிப்பழக்கத்திற்கு வழிவகுக்கும் அடிப்படைச் சிக்கல்களை குறிவைக்கிறது மற்றும் மக்கள் தங்கள் மதுபானம் (ஆல்கஹால்) பழக்கம் இல்லாத எதிர்காலத்தை கற்பனை செய்ய உதவுகிறது. நிரந்தர மாற்றம் மற்றும் சிறந்தவாழ்க்கையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது தெளிவான பாதையை வழங்குகிறது.

மதுவை சார்ந்திருப்பதை நீக்குதல் மற்றும் சேதத்தை சரி செய்தல்

மதுபான துஷ்பிரயோகத்தை சரி செய்வதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது

எங்கள் PUREMIND® மதுதுஷ்பிரயோக தொகுதியை அறிமுகப்படுத்துகிறோம்

மதுபான துஷ்பிரயோகம் என்பது ஆபத்தானதும்  அதிக செலவீனத்தை உண்டாக்கும் மதுபான  துஷ்பிரயோகம் என்பது ஆபத்தானதும் அதிக செலவீனத்தை உண்டாக்கும் பழக்கமாகும். இது பொதுவாக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி சமரசம் செய்கிறது.  பெரும்பாலும் ஒரு குடிகாரனின் சொந்த ஈகோ (கௌரவம்) ஒரு பிரச்சினை இல்லை என்று மறுக்கிறது, அதேநேரத்தில் அவரைச்  சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  எங்களின் மதுபான துஷ்பிரயோக தொகுதி மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள உதவுகிறது மற்றும் அது அவர்களையும், பிறரையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்க உதவுகிறது, குறிப்பாக அவர்கள் நேசிப்பவர்கள் மற்றும் அவர்களை நேசிப்பவர்கள்.  இது நிரந்தரமாக மாறுவதற்கான உந்துதலையும், முழுமையான மாற்றத்தை அடைவதற்கான பாதையையும் வழங்குகிறது.  குடிப்பழக்கம் உள்ள பெரும்பாலான மக்கள் மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்பதால், மதுபானம் அருந்துவதற்கான விருப்பத்தை நீக்குவதற்கு தொகுதி செயல்படுகிறது, அதே நேரத்தில் குடிப்பழக்கத்தால் உடைந்த மற்றும் சேதமடைந்த உறவுகளை  சரிசெய்ய மக்களை ஊக்குவிக்கிறது.  மிகக்குறிய (சப்லிமினல்) ஆலோசனை மற்றும்  விஆர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சக்தியைப் பயன்படுத்தி,  இந்த ஆட்டத்தையே மாற்றியமைக்கும் (கேம்சேன்ஜிங்) விஆர் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கடந்த காலத்திலிருந்து விலகி பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதையைத் தழுவ  உதவுகிறது.