எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினைகள், சுமைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன, அவை நாம் சிறந்தவர்களாக இருப்பதைத் தடுக்கின்றன
உளவியல் மற்றும் விஆர் தொழில் நுட்பத்தின் ஒருங்கிணைந்த சக்தியைப் பயன்படுத்தி மக்களின் மனநலத்தை உருவாக்க உதவுவதே எங்கள் நோக்கம். எடை மேலாண்மை மற்றும் புகைபிடித்தல், மனச்சோர்வு மற்றும் பதற்றம் வரையிலான பொதுவான கோளாறுகள் மற்றும் தேவையற்ற பழக்கங்களைக் கையாள்வதற்கான பயனுள்ள விஆர் கருவிகளை மனநலப் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் விருந்தோம்பல் வாடிக்கையாளர்களுக்கு PUREMIND மன அமைதி™ உடன் வழங்குகிறோம் , இது அவர்களின் வாழ்க்கையின் மன அழுத்தத்தில் இருந்து விடுபட விரும்பும் விருந்தினர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு அற்புதமான விஆர் மனஅழுத்த தீர்வுத் தொகுதியாகும். எங்களின் புதுமையான விஆர் நோய் கண்டறியும் கருவி – PUREMIND கண்டறியும் உதவியாளர்™ மூலம் சிகிச்சை நடைமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
நாங்கள் ஆரோக்கியத்தை உருவாக்கும் உன்னதமான தொழிலில் இருக்கிறோம். உலக முன்னணி கல்வியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பயிற்சியாளர் சமூகங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோம்.
எங்களுடன் ஒத்துழைப்பவர்கள்;மோனாஷ் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா
 
                நாங்கள் PUREMIND® விஆர் சிகிச்சையின் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உருவாக்குபவர்கள் (டெவலப்பர்கள்) இது தனிநபர்கள் தங்களின் வாழ்க்கையை சிறந்தமுறையில் மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான புதிய செயல்முறையாகும். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நிறுவப்பட்ட எங்கள் குழு பன்னாட்டு மற்றும் உலகளவில் விரிவடைகிறது. உலகெங்கிலும் முடிந்தவரை பலருக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
மோனாஷ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சமீபத்திய உலகளாவிய ஆராய்ச்சிகள் எங்களின் தயாரிப்புகளில் இணைக்கப்படுவதை உறுதி செய்ய எங்கள் ஆராய்ச்சிக் குழு கடுமையாகப் போராடுகிறது.
எங்களின் புதுமையான மற்றும் திறமையான மெய்நிகர் (ரியாலிட்டி) குழு அமெரிக்காவில் உள்ளது, அங்கு அவர்கள் எங்கள் தொகுதிகள் அனைத்தின் விஆர் உள்ளடக்கத்தையும் உருவாக்குகிறார்கள். சமீபத்திய மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, எங்கள் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, செயற்படுகிறார்கள்.
எங்கள் தகவல் தொழில்நுட்பத் தளம் (பிளாட்போர்ம்) உருவாக்குநர் (டெவலப்பர்) டாட்ஸ்கொயர்ஸ், எங்கள் இணைய அடிப்படையிலான தளமானது நம்பகமானதாகவும், உலகளவில் அணுகக்கூடியதாகவும், பயனாளிகள் நட்புடன் இருப்பதையும் உறுதிசெய்கிறது. அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டாட்ஸ் கொயர்ஸின் உலகளாவிய வரம்பு ஈர்க்கக்கூடியதாக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து சீர்குலைக்கும் கோவிட் 19 தொற்றுநோயின் சோகம் மற்றும் சமூக செயலிழப்புகளுடன் மனநலச் சேவைகளுக்கு அதிக தேவை இருக்கிறது. எங்களின் PUREMIND® விஆர் சிகிச்சைகள், உலகெங்கிலும் தேவைப்படும் எவருக்கும் பரந்த அளவிலான சிகிச்சைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆராய்ச்சிக்குழு
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நிறுவப்பட்ட எங்கள் ஆராய்ச்சிக்குழு, சிகிச்சையின் நன்மைகள், களங்கத்தைக் குறைத்தல் மற்றும் கவனமாகத் தெரிவு செய்யப்பட்ட நிபுணர்களுடன் உதவி தேடும் நபர்களை இணைப்பது குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்க உறுதி பூண்டுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழகம் எங்கள் தயாரிப்புகளை உருவாக்க மற்றும் சோதிக்க எங்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றுகிறது, மேலும் எங்கள் கூட்டுமுயற்சியின் மூலம் அடையப்பட்ட வலுவான முடிவுகளால் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம்.
ஆதரவுக்குழு
வணிகங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவர்களுக்கு உதவவும், அத்தகைய வணிகத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு நபருக்கும் நேர்மறையான பயனாளி அனுபவத்தை உறுதிப்படுத்தவும் எங்கள் ஆதரவுக்குழு அர்ப்பணிப்புடன் உள்ளது.
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்குழு
எங்கள் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்குழு மனநல நிபுணர்கள் தங்கள் நடைமுறைகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் வணிகங்களைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான தீர்வுகளுடன் அவர்களை இணைக்கவும் அயராது உழைக்கிறது. இந்தக்குழு எங்கள் தனித்துவமான பணி மற்றும் நோக்கம் , தயாரிப்புகள், சேவைகள் மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகள் பற்றிய செய்தியையும் பரப்புகிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தேவைப்படும் இடங்களில் வழங்குவதற்கு எங்களின் தயாரிப்புகள் புதிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, தொடர்ந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
 
                 
                