எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

எங்கள் விஞ்ஞானம்

PUREMIND® விஆர் சிகிச்சைகள் காலத்தின் சோதனையாக  நிற்கும்  அடிப்படை உளவியல் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டவை.

அதிவேக  விஆர்  தொகுதிகள் மூலம் எங்கள் சிகிச்சைகள் வழங்கப்படுவது விரிவாகவும் அனுபவ ரீதியாகவும்  சோதிக்கப்பட்டது.  விஆர் உணர்ச்சித் தூண்டுதலின் கட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தை  அனுமதிக்கிறது, மேலும் அதிவேகமான  விஆர்   சிகிச்சையானது, நேருக்கு நேர் சிகிச்சையை  விட மிகவும்  பயனுள்ள மாற்றங்களைத் தூண்டும். விஆர் அமர்வுகளின் போது பயனாளிகளின் எதிர் வினைகளைக் கவனிக்க பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள், இது சிக்கல்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் வளர்ச்சிக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்குகிறது.

பரந்த அளவிலான பயன்பாடுகள்

நன்கு வடிவமைக்கப்பட்ட விஆர் சிகிச்சைகள் மூலம் பல பொதுவான போதைப் பிரச்சினைகள் துன்பங்கள் மற்றும் வெறுப்புகள் (போபியாக்கள்) நீண்ட கால முடிவுகளுடன் மிகவும் திறம்படத்தீர்க்கப்படுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

இவை மனச்சோர்வு, மனஅழுத்தம், பதற்றம், சுயமரியாதை மற்றும் கோபம் மேலாண்மை கோளாறுகள், புகைப்பிடித்தல் மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல் போன்றவையாகும்.

our-science-middle-img

உளவியல் சிகிச்சை மற்றும் விஆர் தொழில்நுட்பம்: தனிநபர்களுக்காக உருவாக்கப்பட்டது

இன்று அறியப்படும் மற்றும் நடைமுறையில் உள்ள உளவியல் சிகிச்சை, சிக்மண்ட் பிராய்டிடமிருந்து பெறப்பட்டது.  இது  சில நேரங்களில் “பேசும் சிகிச்சை” என்று குறிப்பிடப்படுகிறது, இதன் மூலம் நோயாளிகள் தங்களைப் பற்றிச்  சிந்திக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், மேலும் ஒரு தொழில் முறை பயிற்சியாளரின் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளால் தூண்டப்பட்டு,  ஆழ்மனதில் உணரவைக்கப்படுகிறார்கள்.

உளவியல் சிகிச்சையானது உளவியல் பகுப்பாய்வு மற்றும் பின்னர் வந்த ஒரு பெரிய அளவிலான முன்னோக்கிலிருந்து பெறப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிகிச்சை மரபுகள் மற்றும் வெவ்வேறு  கலாசாரங்களில், உளவியல் சிகிச்சையின்  நடைமுறையானது, பலவிதமான நடத்தைப் பிரச்சினைகள் மற்றும் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு பயனுள்ள மற்றும் நம்பகமான சிகிச்சைத் தெரிவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மெய் நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி/ விஆர்) தொழில் நுட்பம் என்பது முப்பரிமாண, கணினியால் உருவாக்கப்பட்ட  சூழலை உள்ளடக்கிய எந்தவொரு சாதனத்தையும் தலையில் பொருத்தப்பட்ட சாதனம்  (ஹெட்-மவுண்டட்  டிஸ்ப்ளே) மூலம் பார்க்கமுடியும்.

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மூலம் ஹெட் மவுண்டட்  டிஸ்ப்ளேக்கள்  பொருத்தப்பட்ட கைபேசி (மொபைல்) சாதனங்கள் மூலம் இயக்கங்கள் மற்றும் திட்டப்படங்களை   கண்காணிக்கும் திறன் வந்துள்ளது.

 விஆர் தொழில் நுட்பம் முன்பை விட தற்போது மிகவும் மலிவானதும் மற்றும் இலகுவில் பெறக் கூடியதும் ஆகும்.  வேலையில்,   வீட்டில் அல்லது பயணத்தின் போது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு கிடைக்கக் கூடியது.

PUREMIND® சிகிச்சைகள் உளவியல் சிகிச்சை பயிற்சியின் சோதனை செய்யப்பட்ட  விஆர் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை,  கிச்சை மற்றும் தொழில் நுட்பத்தைத் தனிப்பட்ட முறையில் பயனுள்ள வழிகளில்  இணைக்கின்றன.  இன்றுவரை  நடத்தப்பட்ட  சோதனையில் எங்கள் முடிவுகள்  விதிவிலக்கானவை.