குடும்ப வன்முறையானது பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளி இருவரின் ஆன்மாவையும் அழிக்கும். இது பெரும்பாலும் மனநோய்க்கான அறிகுறியாகும், இது பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அடிப்படைச் சிக்கல்களால் உருவாக்கப்பட்டது. எங்கள் PUREMIND® குடும்ப வன்முறை - குற்றவாளி தொகுதி வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதையும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதையும் ஒப்புக்கொள்ள உதவுகிறது. இது அவர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிய உதவுகிறது மற்றும் தங்களுக்கும் தங்களின் அன்புக்குரியவர்களுக்கும் சிறந்த வாழ்க்கையைத் தேட அவர்களை ஊக்குவிக்கிறது .
வன்முறை ஒரு தீர்வாகாது என்பதை கற்றுக்கொள்வது
எங்கள் PUREMIND® குடும்ப வன்முறை – குற்றவாளித் தொகுதி
குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படையில் மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக சர்வதேச ஆராய்ச்சிகள் கூறுகின்றன, பொதுவாக கோப மேலாண்மைப் பிரச்சனைகள், பதற்றம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், ஆளுமைக் கோளாறுகள், குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டம் போன்ற பிரச்சினைகள் மூலமாக இவை வெளிப்படுகின்றன. சிகிச்சைக்கு இந்த அடிப்படைச் சிக்கல்களை தீர்க்கும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஒரு சிக்கல் இருப்பதை ஒப்புக்கொள்வது முதல் படியாகும், இங்குதான் எங்கள் தொகுதி உதவமுடியும். உளவியல் சிகிச்சை மற்றும் விஆர் ஆகியவற்றின் சக்திவாய்ந்த கலவையைப் பயன்படுத்தி, குடும்ப வன்முறையின் அழிவுத் தன்மையை வாடிக்கையாளர்களுக்கும் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவருக்கும் புரிந்துகொள்ள இந்தத் தொகுதி உதவுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மனதில் ஆழமாகத்தோண்டி, சில தூண்டுதல்களுக்கு வன்முறையாக செயல்படுவதற்கு காரணமான அடிப்படை வடிவங்கள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்கிறார்கள். இந்தத் தொகுதி அவர்களுக்கு மனவருத்தத்தை கடந்து செல்லவும், மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலின் மகிழ்ச்சியைப் பாராட்ட உதவுகிறது, அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்குகிறது.