எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

சுய - தீங்கு

சுய - தீங்கு என்பது ஒருமுறை ஏற்படலாம் அல்லது எதிர்க்கக் கடினமாக இருக்கும் ஒரு நாட்பட்ட பழக்கமாக மாறலாம்.  உதவியைத் தேடுவது எளிதல்ல.  எங்களின் PUREMIND® சுய-தீங்கு தொகுதி வாடிக்கையாளர்களுக்குத் தங்களின் பிரச்சனையைப் புரிந்துகொள்ள உதவுகிறது மற்றும் அது ஏன் ஆரோக்கிய மற்றது மற்றும் ஆபத்தானது என்பதையும் புரியவைக்கின்றது. அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளவேண்டியதன் பின்னணியில் உள்ள உணர்ச்சி வலி, பதற்றம் அல்லது துன்பத்தை ஒப்புக்கொள்ளக் கற்றுக் கொள்கிறார்கள் மேலும் இந்த அடிப்படைச் சிக்கல்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதையும் காட்டுகிறார்கள்.

சுயதீங்கு: உதவிக்கான அழுகை

சுய-தீங்குக்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றிப் புரிந்து கொள்வது

எங்கள் PUREMIND® சுய-தீங்கு தொகுதியுடன்

சுய-தீங்கு பலவடிவங்களை எடுக்கலாம், ஆனால் அடிப்படையில் தன்னை வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகும்.  இது வெட்டுதல்,  சிராய்ப்பு,  குத்துதல்,  எரித்தல், கடித்தல், அல்லது தோலை அதிகமாக தேய்த்தல் போன்றவற்றை  உள்ளடக்கும்.   கருவிகளால் தன்னைத்தானே வெட்டிக்கொள்வது, சுவரில் அல்லது தரையில் தலையை முட்டிக்கொள்வது அல்லது விஷத்தை உட்கொள்வது அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வேண்டுமென்றே அளவுக்கு அதிகமாக உட்கொள்வது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது  போன்றவையும்  இதில் அடங்கும்.  சுய-தீங்கு என்பது பொதுவாக தீர்க்கப்படாத உணர்ச்சி வலியைச்  சமாளிக்கச் செய்யும் ஒரு செயற்பாடாகும், தாங்க முடியாத எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலிருந்து தற்காலிக நிவாரணம்  தேடும் முயற்சியாகும்.  எல்லாவற்றிற்கும் மேலாக அதிக வலி தேவைப்படுகிறது. சிலசமயங்களில் தற்கொலை எண்ணங்களுக்கு  வழிவகுக்கிறது.  எங்களின்  PUREMIND®  சுய-தீங்குதொகுதி,  சுய-தீங்கு  விளைவிப்பவர்களுக்கு அவர்களின் உணர்ச்சிப் பிரச்சினைகளின் அடிப்படையை அறிய உதவுகிறது.  அவர்களின் மனம் எதையும் வெல்லக் கூடிய சக்திவாய்ந்த கருவி என்பதை இது காட்டுகிறது.   ஊக்கம், காட்சிப்படுத்தல் மற்றும் பிரதிபலிப்பு  மூலம், அவர்களின் அடிப்படை  உணர்ச்சிப் பிரச்சினைகளைத் தீர்த்து, தங்களின் கடந்த காலத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.  இந்தத் தொகுதியை  முடித்தவர்கள்  இனிமேல்  சுய-தீங்கு செய்யவேண்டிய அவசியத்தை  உணரமாட்டார்கள்.